அடர்ந்த காட்டில் வித்தியாசமான தோற்றத்தில் ‘நானே வருவேன்’ படத்தின் வேறலெவல் போஸ்டர்!

 அடர்ந்த காட்டில் வித்தியாசமான தோற்றத்தில் ‘நானே வருவேன்’ படத்தின் வேறலெவல் போஸ்டர்!

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டது. இந்த படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் செல்வராகவன் இணைந்து இருக்கும் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. பின்னர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் என்ற வாசகத்துடன் தனுஷ் ஸ்டைலாக புகை பிடித்துக் கொண்டு இருப்பது போல ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்த தி கிரேமேன் திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நாளை தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு தனுஷின் லுக் உள்ள படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. வில் அம்புடன் நவநாகரீக தோற்றத்தில் காட்டில் தனுஷ் இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.

இந்த போஸ்டரில் நடிகர் தனுஷ் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் மாடர்ன் டிரெஸ், கையில் வில் அம்பு என கெத்தாக உள்ளார். இதனை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் தானு, நாளை பிறந்தநாள் காணும் திரு தனுஷ் மென்மேலும் பல உயரங்கள் தொட்டு, சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்நாளை மேலும் சிறப்பாக்க #NaaneVaruven திரைப்படத்தின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

  • 94 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !