தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் “நானே வருவேன்” படத்தின் ரிலீஸ் தேதி !!

 தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் “நானே வருவேன்” படத்தின் ரிலீஸ் தேதி !!

தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார். ‘நானே வருவேன்’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

  • 4 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !