ராகவா லாரன்ஸுடன் கைகோர்த்த பிரபல இசையமைப்பாளர்!

 ராகவா லாரன்ஸுடன் கைகோர்த்த பிரபல இசையமைப்பாளர்!

பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ போன்ற வெற்றி படங்களைத் தயாரித்தவர் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆர். கதிரேசன். இவரும் இயக்குநர் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். ‘அதிகாரம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தன்னுடைய கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரும், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவருமான துரை செந்தில்குமார் இயக்குகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்க இருக்கிறது. மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் மோஷன் போஸ்டரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ‘புட்ட பொம்மா…’ பாடல் புகழ் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனைப் படக்குழுவினர் சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 • 545 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !