ஊழியரை மிரட்டிய நடிகை #மீராமிதுன்! 2வது வழக்கில் மீண்டும் கைது!

 ஊழியரை மிரட்டிய நடிகை #மீராமிதுன்!  2வது வழக்கில் மீண்டும் கைது!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் திடீரென அவர் தலைமறைவானார். ஆனால் கேரளாவில் அவர் கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை நடிகை மீரா மிதுன் மிரட்டியதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகை மீரா மிதுன் மீது ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது 30 பக்க குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மீரா மிதுன் மீது சென்னையிலுள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், நடிகை மீரா மிதுனை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்தும் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 11 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !