“தவறான தகவலை பரப்ப வேண்டாம்” – நடிகை மீனா உருக்கம்!!

 “தவறான தகவலை பரப்ப வேண்டாம்” – நடிகை மீனா உருக்கம்!!

தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.

சமீபகாலமாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வித்யாசாகரின் உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் சமூக வலைத்தளங்களில் மீனாவின் கணவர் இறப்பு குறித்த பல செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் நடிகை மீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எனது கணவர் வித்யாசாகரை  இழந்ததால் மிகவும் வாடுகிறேன். இந்த நேரத்தில் எனது கணவர் இறப்பு குறித்து யாரும் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். இந்த இக்கட்டான சூழலில் எங்களுடைய துயரத்தில் பங்கேற்ற உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சிறப்பான மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், தமிழக முதல்வர் மற்றும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் ஆகியோருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 • 2327 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !