வேட்டிய மடிச்சுக்கிட்டு மாஸ் காட்டிய விஜய்சேதுதி… #MasterChef புதிய ப்ரோமோ!

 வேட்டிய மடிச்சுக்கிட்டு மாஸ் காட்டிய விஜய்சேதுதி… #MasterChef புதிய ப்ரோமோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார்.

சமையல் கலை மற்றும் விதவிதமான உணவு வகைகளை மையப்படுத்தி உலகம் முழுவதும் பல முன்னணி சேனல்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதேபோல் யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் உணவுக்காக வரவேற்பு எப்போதும் டாப் தான்.

இவர் ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  உள்ளார். இந்நிகழ்ச்சிக்கா படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், “நல்லா சமைக்கும் கைக்கு மோதிரமோ, தங்கமோ தரலாம்ன்னு சொல்வாங்க. ஆனா அன்பா சமைச்சு பரிமாறுறவங்களுக்கு எந்த தங்கமும் ஈடாகாது. அது ஒரு குட்டி லஞ்சம் தான், குடுத்தாலும் தப்பில்லை. ஆனா அவங்க மனசு எதிர்பார்க்குறதெல்லாம், நாம அன்பா பாராட்டி சொல்லும் ரெண்டு வார்த்தை தான். அப்படி நம்ம கூடவே இருப்பவங்களின் அசத்தல் சமையலை உலகறிய பாராட்டும் மேடை தான் இது. மாஸ்டர் செஃப் தமிழ் – இது நம் மக்கள் சமைக்கும் டக்கர் சமையல். டேஸ்ட் பண்ண ரெடியா இருங்க” என்று தெரிவித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

 • 21 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !