ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
டேபிள் டென்னிஸில் இந்திய நம்பிக்கை வீரர் மணிகா ‘#பத்ரா’ தோல்வி…

ஜப்பன் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்றில் உக்ரைன் நாட்டின் மர்காரிடா பெசோட்ஸ்காவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார் மணிகா பத்ரா. முதலிரண்டு கேம்களை 4-11, 4-11 என்ற கணக்கில் இழந்து மணிகா பத்ரா பின்னடைவைச் சந்தித்தார்.
ஆனால், அடுத்த இரண்டு கேம்களில் எழுச்சி கண்ட மணிகா 11-7, 12-10 என்ற கணக்கில் வென்று மிரட்டினார். எனினும், 5-வது கேமை மீண்டும் உக்ரைன் வீராங்கனை 11-8 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிகா 6-வது மற்றும் 7-வது கேமை முறைய 11-5, 11-7 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.
3-வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, ஆஸ்திரியாவின் சோபியா பொல்கானோவாவை எதிர்கொண்டார். முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக விளையாடிய மணிகா பத்ரா, இந்த சுற்றில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இதனால் 8-11, 2-11, 5-11, 7-11 என தொடர்ந்து நான்கு கேம்களை இழந்து தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.