#மாதவன் இயக்கியுள்ள ‘#ராக்கெட்ரி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 #மாதவன் இயக்கியுள்ள ‘#ராக்கெட்ரி’  ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை !அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ராக்கெட்ரி’. இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். 

சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில், ‘ராக்கெட்ரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

  • 90 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !