தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
சிவகார்த்திகேயன், அதிதி நடிக்கும் #மாவீரன் படத்தின் ஆடியோ ரைட்ஸ்!! வெளியான சூப்பர் அப்டேட்!!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டிய நிலையில் அவர் அடுத்து நடிக்கும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை ‘ச ரி க ம’ நிறுவனம் கைப்பற்றி உள்ளது