அடுத்த சரவெடி ! மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

 அடுத்த சரவெடி ! மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில், சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்துவரும் இப்படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகி, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளன.

பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, சென்னை, புதுச்சேரி மற்றும் பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவந்தது. கரோனா பரவல் காரணமாக கடுமையான நெருக்கடிகள் நிலவியபோதிலும் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் படப்பிடிப்பு நடத்தி, திட்டமிட்டபடியே மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. 

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வரும் தீபாவளி தினத்தன்று ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகவுள்ள நிலையில், ‘மாநாடு’ படக்குழுவினரின் இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

  • 1 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !