சிம்பு ஃபேன்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்? ‘மாநாடு’ பற்றி வெளியான மாஸ் அறிவிப்பு!

 சிம்பு ஃபேன்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்? ‘மாநாடு’ பற்றி வெளியான மாஸ் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களை உற்சாகம் அடையவைத்தது.

அதனுடன் கூடுதல் குஷி தரும் விஷயமாக மன்மதன் திரைப்படம் இந்த லாக்டவுன் நேரத்தில் மீண்டும் வெளியானது. இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வந்த சிம்பு தமது பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டு வந்தார்.

இந்நிலையில் தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்ததாக சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தகவல் ரசிகர்களை உற்சாகம் அடையவைத்தது. சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

எனினும் இந்த படத்தின் ஆடியோ தொடர்பான விபரங்களோ கொரோனா சூழலில் பல இழப்புகள் நடக்கும் நேரத்தில் அறிவிப்பது சரியாக இருக்காது என கருதுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் அறிவிப்பை வரும் புதன் அன்று யுவன் ஷஙக்ர் ராஜா அறிவிப்பார் என்றும் இப்படத்தின் ஆடியோ உரிமத்தை யுவனின் U1Records கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 • 6 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !