‘மாநாடு’ படத்தின் வேற லெவல் அடுத்த அப்டேட்….!

 ‘மாநாடு’ படத்தின் வேற லெவல் அடுத்த அப்டேட்….!

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஜனவரி 14 ம் தேதி பொங்கல் விருந்தாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரசிகர்களிடம் வரவேற்பையும், பல விதமான விமர்சனங்களையும் பெற்றது.

இதைத் தொடர்ந்து சிம்புவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிக்கிறார்.

மாநாடு படத்தின் பணிகள் கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது லேட்டஸ்ட் தகவலாக டப்பிங் பணிகளும் ஏற்கனவே துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தால், படக்குழுவினர் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளனர்.

இதனிடையே மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரசிகர்கள் மீண்டும் பாடல் குறித்து கேட்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

இதனிடையே மாநாடு திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடியான ஐந்து அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

  • 137 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !