ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.. – எடப்பாடி ; தமிழக அரசியலில் இரு அமாவாசைகள் – உதயநிதி ; களைகட்டிய தேர்தல் பிரச்சாரம் ஒரு பார்வை !!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல் திமுக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, ” தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என்று திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. தரமற்ற பொருட்களை தமிழகம் முழுவதும் திமுக அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு தரமற்ற அழகான பொருட்களை வழங்கிய ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் அல்ல, நோபல் பரிசே வழங்கலாம் என்றார்.