பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
இந்த வாரம் #OTTயில் வெளியாகும் திரைப்படங்கள்! ஒரு பார்வை!!

வாத்தி
திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ வெற்றிப் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள ‘வாத்தி’ படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியிடப்ப்பட்டது.சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட்போன் சிம்ரனும். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக ஆக உள்ளது.