போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி வருகிறார் லிங்குசாமி. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கிய இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிட்டுள்ளது படக்குழு. ‘தி வாரியர்’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தில் ராம் பொத்தினேனி முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
“தி வாரியர்” படத்தின் டீசர் அப்டேட்டை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி படத்தின் டீசர் மே மாதம் 14 ஆம் தேதி, மாலை 5.31 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த படத்தில் அக்ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.