பிரபல நடிகர் #நெடுமுடி வேணு காலமானார்!

 பிரபல நடிகர் #நெடுமுடி வேணு காலமானார்!

1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்க ளிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழில் ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். 

. இவரது மறைவுக்கு மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • 3 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !