‘ஆண்டவனே வந்து ஆடப் போறான் வாடி வாசல்’ – ‘தி லெஜண்ட்’ படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் இரண்டாவது பாடல் இன்று காலை திங் மியூசிக்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.‘உல்லாசம்’, ‘விசில்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில்புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள். ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
மறைந்த நடிகர் விவேக் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
மேலும், இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியிட்டு விழா வரும் மே 29-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கடந்த மாதம் வெளியான ‘மொசலோ மொசலு’ என்கிற பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘வாடி வாசல்’ என்ற இரண்டாவது பாடல் திங் மியூசிக் யூ-ட்யூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.