ஐபிஎல் 2021: பிபிகேஎஸ் vs சிஎஸ்கே இன்றைய போட்டியில் யார் வெல்வார்கள்?

 ஐபிஎல் 2021: பிபிகேஎஸ் vs சிஎஸ்கே இன்றைய போட்டியில் யார் வெல்வார்கள்?

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெற உள்ளது.முன்னதாக டெல்லி கேபிடல்ஸ் முதல் போட்டியில் களமிறங்கிய சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மேலும் அணியின் பந்து வீச்சாளர்கள் காலதாமதமாக ஓவர்கள் வீசியதால் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

முதல் போட்டி என்பதால் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. இதேபோல் இன்று ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பந்து வீச அதிகநேரம் எடுத்துக்கொண்டால் அணியின் கேப்டன் தோனி இரண்டு லீக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் கிங்ஸ் அணி: கே.எல்.ராகுல் (வ / சி), மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், ஜெய் ரிச்சர்ட்சன், முருகன் அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மாண்டீப் சிங் .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (வ / சி), ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டுவைன் பிராவோ, ஷார்துல் தாகூர், தீபக் சாஹர், ராபின் உத்தப்பா, கர்ன் சர்மா, இம்ரான் தாஹிர், கிருஷ்ணப்ப கவுதம், மிட்செல் சாண்ட்னர், ரவிஸ்ரினிவாசன் சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கே.எம் ஆசிப், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா.

 • 40 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !