தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு லோக்கடவுன் ? டுவிட்டரில் டிரெண்டிங் !

 தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு லோக்கடவுன் ? டுவிட்டரில் டிரெண்டிங் !

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே மும்பை, டில்லி உள்ளிட்ட பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதிநாட்களில் ஊரடங்கு, தியேட்டர்கள் மூடல் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சட்டபை தேர்தல் நடந்து வந்ததால் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்பாடல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 3000க்கும் அதிகமான பேர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளது.

அதன்படி,

* தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது.

* திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.

* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

* பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.

* கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.

* வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி

* பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

* உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 • 28 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !