தேசிய விருதுகளை வென்ற மோகன்லால் படத்தின் ரிலீ ஸ் தேதி அறிவிப்பு!

 தேசிய விருதுகளை வென்ற மோகன்லால் படத்தின் ரிலீ ஸ் தேதி அறிவிப்பு!

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’.

இதில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், பிரியதர்ஷனின் மகள் பிரியாகிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், அசோக் செல்வன், சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

16ஆம் நூற்றாண்டில் இந்திய கடற்படை எல்லையில் முதன்முறையாக கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவராக அறியப்படும் குஞ்சாலி மரைக்காயர் என்பவரின் வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படம் மலையாள சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்லப்படுகிறது.

சுமார் 100 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது நிலவி கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ படம் உலகம் முழுக்க வெளியாகவுள்ளதாக மோகன்லால் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • 5 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !