‘உலகமே வியக்கும் தலைவர் மோடி’ – அமைச்சர் புகழாரம்!

 ‘உலகமே வியக்கும் தலைவர் மோடி’ – அமைச்சர் புகழாரம்!

மதுரையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அவர் பேசியதாவது:- ‘ உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை. மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது’ என கூறினார்.

தமிழக மக்களின் நலனுக்காக அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்கா வர உள்ளது. நாடு முழுவதும் வைபை சேவை விரைவில் அளிக்கப்படும்.

தமிழகத்தில் சுமார் 16 லட்சம் வீடுகளுக்கு குழாய்மூலம் வீடுகளுக்கு நேரடியாக தண்ணீர் வழங்கும் திட்டம் நிறைவேறி உள்ளது.

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்தது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும், என கூறினார்.

பிரசார கூட்டத்தில் பேசிய துணை முதல்-அமைச்சர் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகிற தேர்தல் என கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போதுகொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காப்பாற்றுபவர் பிரதமர் மோடி. நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட தலைவர், உலகமே வியக்கும் அளவுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிய பெருமை பிரதமர் மோடியையே சாரும். ஒரே ஆண்டி கொரோனா தடுப்பூசியை கொண்டுவந்தவர் மோடி என கூறினார்.

 • 9 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !