இந்தியாவில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

 இந்தியாவில் சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நேற்று முன்தினம் (ஏப்.,25) 3.52 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், நேற்று சற்றே குறைந்து 3,23,144 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்தது.ஒரே நாளில் 2,51,827 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியது. 28.82 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,97,894 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 82.54 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.12 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 16.34 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  • 6 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !