IND vs ENG : பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

 IND vs ENG : பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து தொடரையும் கைப்பற்றியது.

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு விளையாடிய இந்திய அணி 48.2 ஓவரில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 78, ஷிகர் தவான் 67, ஹர்திக் பாண்டியா 64 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் காரன் 95, டேவிட் மாலன் 50, லிவிங்ஸ்டன் 36 ரன்களை எடுத்தனர்.இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4, புவனேஷ்வர் குமார் 3, நடராஜன் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3, ஆடில் ரஷீத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட், டி20 போட்டியுடன், ஒரு நாள் கிரிக்கெட் தொடரையும் வென்றது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

  • 9 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !