சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்- நிர்மலா சீதாராமன்!

 சேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு வாபஸ்- நிர்மலா சீதாராமன்!

வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், பிபிஎஃப் (PPF), KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைப்பதாக நேற்று (31/03/2021) நிதியமைச்சகம் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “2020 – 2021 நிதியாண்டின் கடைசி காலாண்டில் உள்ள சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடரும். வட்டி குறைப்பு தொடர்பாக நேற்று (31/03/2021) வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வங்கி சேமிப்பு வட்டி விகிதம் 4.0% ஆகவும், ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு கால வைப்பு நிதி வட்டி விகிதம் 5.5% ஆகவும், ஐந்து ஆண்டு கால வைப்பு நிதி வட்டி விகிதம் 6.7% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.4% ஆகவும், பிபிஎஃப் (Public Provident Fund Scheme) வட்டி விகிதம் 7.1% ஆகவும் தொடருகிறது.

ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என டுவிட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 • 24 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !