முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் கொரோனா தொற்று பரவல் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார்.

தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னதாக செய்யப்பட்டது. அதில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • 14 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !