சென்னையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் !

 சென்னையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் !

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட பிரசாரத்தை சென்னையில் இன்று மாலையிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இந்தத் தேர்தலில் பாமக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. அதேபோல மறுபுறம் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக களமிறங்குகிறது.

இதில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.சென்னையில் இன்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ஐஸ்அவுஸ் அருகே பேசுகிறார். அதன் பிறகு ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளரை ஆதரித்து வள்ளுவர்கோட்டம் சுதந்திர தின பூங்கா அருகே பிரசாரம் செய்கிறார்.பின்னர் சைதாப்பேட்டை சென்று அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அரங்கநாதன் தெரு சுரங்கப்பாதை அருகே பேசுகிறார். அங்கிருந்து எம்.ஜி.ஆர். நகர் சென்று விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளரை ஆதரித்தும், முகப்பேர் மேற்கு பகுதிக்கு சென்று மதுரவாயல், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்தும் பேசுகிறார்.அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இளங்கோ நகர் ஆபீசர் காலனி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

சென்னையில் இன்று 10 தொகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஓட்டு வேட்டை நடத்துவதால் அ.தி.மு.க.வினரிடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

  • 14 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !