உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
ரெம்டெசிவிர் மருந்துக்கு 5வது நாளாக அலைமோதும் மக்கள்!

கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை எடுக்கிறார்கள்.
முதல் மூன்று நாட்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கவுண்டர் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், நேற்று முதல் மருத்துவமனையின் எதிரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு விற்பனை மையம் மாற்றப்பட்டது.
மருந்து வாங்க தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் மருந்து விற்கப்படுகிறது. அதன் பிறகும் காத்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.டோக்கன் பெற்றவர்களும் புதிதாக வருபவர்களும் இரவில் விடிய விடிய காத்து கிடக்கிறார்கள்.