45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு!

 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில், இதுவரை 41,72,963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 60 வயதுக்கு மேற்பட்ட 14,11,194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13,93,811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அடுத்த 10 நாளில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென்று கூறினார்.

மத்திய அரசின் வழி காட்டுதலை பின்பற்றி சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை 100 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சத்தை போக்குவதற்காக கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்ள இருக்றோம்” என்று கூறினார்.

 • 11 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !