கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தமிழகத்தில் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

 கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தமிழகத்தில் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை!

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருப்பூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு இருந்து வந்தநிலையில் இந்த மாதம் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தடுப்பூசி மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும் தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. பொது இடங்களில் எச்சில் துப்புதல், முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் போன்றவை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு பொது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது போல் இல்லாமல் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.

மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தனர்.

இதில் பிளஸ்-2 தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.இக்கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற முடிவு குறித்து இறுதி செய்யப்பட்டு இன்று மாலை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 15 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !