புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?- தலைமை செயலாளர் ஆலோசனை!

 புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா?- தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 571 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,335 முதியவர்களும் அடங்குவர்.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும்,செங்கல்பட்டில் 1,219 பேரும் கோவையில் 963 பேரும், திருவள்ளூரில் 751 பேரும், திருநெல்வேலியில் 741 பேரும், தூத்துக்குடியில் 594 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முழு ஊரடங்கை அமல்படுத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை கூடுதலாக கொண்டு வருவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு குறித்து அரசு அறிக்கை வெளியிட்டு வருவதால் 1-ந் தேதியில் இருந்து பின்பற்றப்பட வேண்டிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.

அநேகமாக இன்று மாலை அல்லது நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடந்த வாரம் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் 26-ந் தேதி முதல் கொண்டுவரப்பட்டு இருந்தது.

 • 6 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !