கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது!

 கொரோனா நிவாரண நிதி- ரே‌ஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் விநியோகம் தொடங்கியது!

தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.தற்போது கொரோனா பரவல் அதிகமான சூழலில் ஜூன் 3-ந்தேதி ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கு பதிலாக இந்த மாதமே (மே) முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 10-ந்தேதி தலைமை செயலகத்தில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் கொரோனா நிதி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதிக்கான டோக்கன் வழங்கப்பட்டது.அந்த டோக்கனில் எந்த தேதியில் வந்து ரே‌ஷன் கடை களில் ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.அதன் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணம் இன்று முதல் விநியோகிக்கப்பட்டது

  • 3 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !