‘தளபதி 65’ Update: ஜார்ஜியா பறந்த நடிகர் விஜய்!

 ‘தளபதி 65’ Update: ஜார்ஜியா பறந்த நடிகர் விஜய்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தை இயக்கிய நெல்சனுனின் இயக்கத்தில் தனது 65 வது திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை சன் பிக்ஸ்ர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். ஜார்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.தளபதி 65 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற உள்ளது. அதை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை மே மாதம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

 • 23 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !