தேர்தல் வெற்றியை கொண்டாட தடை- இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

 தேர்தல் வெற்றியை கொண்டாட தடை- இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது.

உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மே 2-ந்தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • 2 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !