இரட்டிப்பு மாற்றம் கொரோனா இல்லை.. ஆனால் பரவ காரணம் பொதுமக்கள் தான்! – சுகாதாரத்துறை செயலாளர் வருத்தம்!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு வந்த நிலையில் கடந்த ஒரு சில வாரங்களில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு கரணம் தமிழகத்தில் ஒரு புறம் தேர்தல் பணிகளும் மற்றும் போக்குவரத்து பயனங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால். கொரோனா

குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு செயல்படுத்த வாய்ப்பில்லை. என்று கூறினார். இதுவரை தமிழகத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இரட்டிப்பு மாற்றமடைந்த கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது கொரோனா அதிகரிக்க காரணம். பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதுதான். எனவே, பொதுமக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என ‘சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்’ கூறியுள்ளார்.