இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

 இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 21,57,538 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 13,01,19,310 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 27,10,53,392 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 16,39,357 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

  • 7 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !