தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
விஷாலின் ’லத்தி’ டிரைலர் குறித்து அறிவிப்பு!!

‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் டிரைலர் வருகிற டிச.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.