நடிகை குஷ்புவின் அண்ணன் காலமானார்!!

 நடிகை குஷ்புவின் அண்ணன் காலமானார்!!

தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

இவர் சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இன்று குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள குஷ்பு, “உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது” என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

 • 18 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !