‘#’KGF2’வின் மெகா ஹிட் ‘மெகபூபா’ வீடியோ பாடல் இதோ!!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும், ‘கேஜிஎஃப் 2’ வெற்றியால் பாலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது.
பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘தங்கல்’லுக்கு அடுத்த ‘டான்’ நான் என ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்து தென்னிந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரூ.100 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ராக்கி பாயின் ராஜாங்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அந்தளவிற்கு, ‘அவன் கத்தி வீசின வேகத்துல புயலே உருவாகிடுச்சி சார்’ என பில்டப் காட்சிகளால் தியேட்டரையே பிளிறிடவைத்தார் பிரஷாந்த் நீல். அதற்கு இணையாக, ‘அகிலம் நீ’, ‘மெகபூபா’ பாடல்களும் இதயத்தை இனிக்க வைத்தன.