சீரியல் நடிகையுடன் இணைந்த தனுஷின் ரீல் மகன் ….செம்ம ஆட்டம் போட்ட கென் கருணாஸ்!

 சீரியல் நடிகையுடன் இணைந்த தனுஷின் ரீல் மகன் ….செம்ம ஆட்டம் போட்ட கென் கருணாஸ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி தேசிய விருது பெற்ற திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷின் மகனாக நடித்து புகழ் பெற்றவர் கென் கருணாஸ்.

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகனான கென் கருணாஸ் தற்போது தனது நண்பர் ஈஷ்வருடன் இணைந்து எழுதி, இசையமைத்து உருவாகியுள்ள வீடியோ பாடல் ‘வாடா ராசா.

இந்த பாடலில் கென் கருணாஸ் வேட்டியுடன் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இந்த பாடலில் கென் கருணாஸூடன், பிரபல சித்தி-2 நடிகை ப்ரீத்தி ஷர்மா முதன்மை நாயகியாக நடனம் ஆடி நடித்துள்ளார்.

தி ரூட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடல் சோனி மியூசிக் தளத்தில் வெளியாகியுள்ளது.  ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் நடிப்பில் குட்டி பட்டாஸ் பாடலை இயக்கிய, இயக்குநர் வெங்கி இந்த பாடலை இயக்க, சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்

  • 14249 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !