தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
30 கோடி ரூபாய் வியாபாரத்தை தாண்டிய கட்டா குஸ்தி… விஷ்ணு விஷால் மகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.விஷ்ணுவிஷால் ரவிதேஜா ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார் .
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு விஷால் இந்த படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.