பாலிவுட் நடிகை கரினா கபூரின் இல்லத்துக்கு சீல் வைத்தது மும்பை மாநகராட்சி!

 பாலிவுட் நடிகை கரினா கபூரின் இல்லத்துக்கு சீல் வைத்தது மும்பை மாநகராட்சி!

பாலிவுட் நடிகைகள் கரினா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருவரும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரும் கடந்த வாரம் ஒரு கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யுமாறு மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், மும்பையில் நடிகர் அனில் கபூரின் மகள் ரியா கபூர் நடத்திய பார்ட்டிலும் இவர்கள் கலந்து கொண்டு என்ஜாய் செய்தனர். சமேலும் இந்த பார்ட்டியில் கரிஷ்மா கபூர், மலைக்கா அரோரா, கரீனாவின் மேலாளர் பூனம் தமானியா மற்றும் மசாபா குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு லேசான சளி பிரச்சனை இருந்ததை தொடர்ந்து, இவர்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து, பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கரீனா மற்றும் அம்ரிதாவுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களை ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை கரீனா கபூருக்கும், அவரது தோழிக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் , மும்பையில் உள்ள கரீனா கபூர் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

  • 13 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !