வரலெட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கன்னித்தீவு’ டீசர் வெளியீடு….!

 வரலெட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘கன்னித்தீவு’ டீசர் வெளியீடு….!

தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பாம்பன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 107-வது படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா , ஆஷ்னா ஜாவேரி, சுபிக்ஷா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சிட்டி பாபு ஒளிப்பதிவு செய்ய ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று கன்னித்தீவு படத்தின் டீசர் வெளியானது. வரலட்சுமி சரத்குமார் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்ஷா என நான்கு கதாநாயகிகள் அதிரடியில் கலக்கும் கன்னித்தீவு படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

  • 6 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !