கமல் நடிக்கும் ‘#விக்ரம்’ பட ஆடியோ & டிரைலர் வெளியீடு எங்கே தெரியுமா ?! வெளியான சூப்பர் அப்டேட் !!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும், ப்ரொமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. ரயில் மூலம் ப்ரொமோஷனை துவக்கியவர்கள், படத்தின் ஆடியோ வெளியீட்டை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலரை பிரான்சில் மே 18 ம் தேதி நடைபெற உள்ள கென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
ஆனால் இதுவரை எங்கும் நடக்கும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ ரிலீஸுக்கு முன்னர் மே 11 (நாளை) ஆம் தேதியே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் தனியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸாக படத்தில் கமல்ஹாசன் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி பாடியுள்ளதாக அனிருத் அறிவித்துள்ளார். மேலும் பாடல் எழுதுவதற்காக அனிருத், கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. கமல்ஹாசன் இதற்கு முன்பாக பல படங்களில் பல வெற்றிகரமான பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.