‘#மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் கமல்!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.