#விக்ரம் படத்தின் வெறித்தனமா புதிய போஸ்டரை  வெளியிட்ட படக்குழு !

 #விக்ரம் படத்தின் வெறித்தனமா புதிய போஸ்டரை  வெளியிட்ட படக்குழு !

மலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

‘விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவரும் தோன்றும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அனிருத் இசையமைப்பில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது என்று குறிப்பிடத் தக்கது.

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலைக் கமலே எழுதிப் பாடியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாடல் வெளியான பின்னர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • 5611 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !