வெளியானது சசிகுமாரின் ’காரி’ – படம் எப்படி இருக்கு?ட்விட்டர் விமர்சனம் இதோ!!

 வெளியானது சசிகுமாரின் ’காரி’ – படம் எப்படி இருக்கு?ட்விட்டர் விமர்சனம் இதோ!!

சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.காரி திரைப்படத்தில் சசிகுமார், அறிமுக நாயகி பார்வதி, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில், புதுமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியுள்ள திரைப்படம் காரி. சர்தார் திரைப்படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நம்பிக்கை இருந்தால் எதுவும் நடக்கும், காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை என்ற ஒற்றை வரி கதைக்கு பின்னால், ஏராளமான சம்பவங்களையும், சின்ன சின்ன கருத்துக்களையும் இணைத்து காரி திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே கோயிலை யாருக்கு நிர்வகிப்பது என்ற போட்டி வருகிறது. அதை ஜல்லிக்கட்டு நடத்தி முடிவு செய்வது என தீர்மானிக்கின்றனர். ஆனால் பல வருடங்களுக்கு முன் ஊரை விட்டு சென்ற சசிகுமாரின் குடும்பம் வந்தால்தான் அந்த ஜல்லிக்கட்டை நடத்த முடியும். அவர் வந்தாரா? கோயில் யாருக்கு சென்றது? இதற்கிடையே சின்ன  அரசியல் என காட்சிகளை அடுத்தடுத்து நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஹேமந்த்

  • 26 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !