தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
வந்துவிட்டார் முத்துவேல் பாண்டியன்.. ட்ரெண்டிங்கில் ‘#ஜெயிலர்’ படத்தின் வீடியோ!!

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு அந்த கதாபாத்திரத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்