நந்தமுரி பாலகிருஷ்ணா & அனில் ரவிபுடியின் படத்திற்கு இசையமைக்கும் எஸ் தமன்…
‘ராஜமாதா’வாக வரலட்சுமி சரத்குமார்!!வைரலாகும் போஸ்டர்!

ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படம் வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், படத்தில் புரொமோஷனுக்காக இதில் நடித்த ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் பெயரையும் படக்குழு வெளியிட்டு வருகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார் ‘பிரேமகுமாரி’ என்கிற ராஜமாதா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.