போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
‘#இடியட்’ ட்விட்டர் திரை விமர்சனம் : படம் எப்படி இருக்கிறது ?

’தில்லுக்கு துட்டு’,அண்ட் 2’ ராம்பாலாவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். ’தமிழ்ப்படம், அண்ட் 2’ மூலம் அகில உலக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிவா நாயகனாக நடித்திருக்கும் படம். இயக்குநர், நாயகன் இருவருமே காமெடியை மட்டுமே கதைக்களமாக தேர்ந்தெடுப்பவர்கள். இவர்கள் இருவருடன் ஆனந்த்ராஜ், ஊர்வசி, சிங்கமுத்து, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், ரவிமரியா, மயில்சாமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட காமெடி பட்டாளமே இதில் களமிறங்கியிருப்பதால் செம்ம காமெடி படமாக இருக்குமோ எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ’இடியட்’?
செம்மனூர் ஜமீனுக்கு தளபதிகளாய் இருக்கும் சேதுபதியும், சேனாதிபதியும் நகைகளுக்காக சதிசெய்து ஜமீனையும் அவரது குடும்பத்தினரையும் ஏமாற்றி பாதாள அறைக்குள் தள்ளி சாகடித்து சொத்துக்களை கைப்பற்றிக்கொள்கிறார்கள். இதனால், பழிவாங்க ஆவியாய் அலைந்துகொண்டிருக்கிறது ஜமீன் குடும்பம்.
ஒலிம்பிக் ஜோதியை ஏந்தி ஓடி வந்தவரைக்கூட ஊரைக்கொளுத்துவதற்காக வந்தான் என்று கட்டிபோட்டு அடிக்கும் அளவுக்கு அறியாமை கிராமமான வீரபாண்டி ஊர்த்தலைவராக ராசு (ஆனந்தராஜ்), அவரது மகன் சின்ராசு (சிவா). ஒரு மொக்கையான காரணத்துக்காக கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்லும்போது விபத்துக்குள்ளாகி மனநலம் பாதிக்கப்பட்டுவிடுகிறார். இதனால், மனநல மருத்துவர் ஸ்மிதா (நிக்கி கல்ராணி) வின் மருத்துவமனையில் அட்மிட் ஆவதோடு நிக்கியை காதலிக்கவும் தொடங்கி விடுகிறார்.
அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள சூனியக்காரப் பெண் நீலகண்டி (அக்சரா கவுடா) நிக்கி கல்ராணியின் உயிரை எடுக்க காத்திருக்கிறார். இன்னொரு பக்கம், நிக்கி கல்ராணியை கடத்தி ப்ளாக்மெயில் செய்து, அவரது அப்பாவிடம் பணம் பறிக்கவேண்டும் என்று பல வருடங்களாக ஃபாலோ அப் பண்ணிக்கொண்டிருக்கிறது ரவிவர்மா டீம். இதில், யார் முந்தினார்கள்? பேய் பங்களாவுக்குள் சிக்கிக்கொள்ளும் நிக்கி கல்ராணிக்கு என்ன ஆனது? ஒன்சைடாக நிக்கியை காதலித்த சிவா எப்படி நிக்கியை காப்பாற்றினார்? அங்குள்ள பெண் பேய்கள் சிவாவின் குடும்பத்தால் படும் பாடு போன்றவையே மீதிக்கதை.