ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா!

 ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்றது இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது இந்திய அணி. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் பதக்கத்தை வென்று வரலாற்றை உருவாக்கியுள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்ட இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி 
வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது. 

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது. 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஹாக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும்.

  • 20 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !